Naan Veezhven Endru Ninaithayo? நான் வீழ்வே னென்று நினைத் தாயோ? -Poetry by Subramaniam Barathiyar

 

Naan Veezhven  Endru Ninaithayo? நான் வீழ்வே னென்று நினைத் தாயோ

Poetry by Subramaniam Barathiyar


தேடிச்
சோறுநிதந் தின்று

Those who scavenge for their next meaL

பல சின்னஞ் சிறுகதைகள் பேசி

Engage in worthless petty talks

மனம் வாடித் துன்பமிக உழன்று

As a result, their minds have wilted with disparity and agony

பிறர் வாடப் பலசெயல்கள் செய்து

Indulged in actions to harm others

நரை கூடிக் கிழப்பருவ மெய்தி

Have their hairs grow grey without any achievements

கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்

And then would succumb to cruel fate of death

பல வேடிக்கை மனிதரைப் போலே

Like these risible people

நான் வீழ்வே னென்று நினைத் தாயோ ?

Did you think I too would fall prey to these stupidities?

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன்

Oh Almighty! I ask few boons from you

அவை நேரே இன்றெனக்குத் தருவாய்      

Grant those today straightaway to me

என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள்

Let all my past journey of sins

இன்னும் மூளா தழிந்திடுதல் வேண்டும்

Today be completely absolved off

இனி என்னைப் புதியவுயி ராக்கி

Grant me now a new life

எனக் கேதுங் கவலையறச் செய்து

Remove all the worries inside me

மதி தன்னை மிகத்தெளிவு செய்து

Make my intellect sound and clear

என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.

And make me eternally happy

என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.

And make me eternally happy


 


Naan Veezhven Endru Ninaithayo? Female Version.
One of the best Bharathiar Poetry expressed with at most candour thoughts in mind.

Post a Comment

0 Comments