Tamizh Poetry Space தமிழ் கவிதை அரங்கம்




தலைப்பு : கற்பனை


நாள் 27 - 12 - 2020


கற்பனை புத்திசாலிதனத்தை உருவாக்கும்

கற்பனை அறிவை வளர்க்கும் 

கற்பனை சிந்தனை தூண்டும் 

கற்பனை கற்றவனை இயக்கும்

கற்பனை காவியம் படைக்கும் 

கற்பனை கதைகளை எழுதும்

கற்பனை கவி பாடும்

கற்பனை கனா காணவைக்கும்

கற்பனை எழுகோல் மை தீர்க்கும் 

கற்பனை எழுத்து புத்தகத்தை நிரப்பும்

கற்பனை வாழ்வை மகிழ்விக்கும்


--------------------------------------------------ரஹீம் ஜாவித் (திருச்சி)



 இன்பங் காணும் வழியெது


முதுமையில் இன்பங்காணும் வழியெது இளமையின் உழைப்பில்

தேனியின் இன்பங்காணும் வழியெது மலர்த்தேன் பருகுதலில்

மனிதரின் இன்பங்காணும் வழியெது குறைவில்லா ஆரோக்கியத்தில்

முதியோரின் இன்பங்காணும் வழியெது பிள்ளைகளின் ஆறுதலில்

உழவனின் இன்பங்காணும் வழியெது பருவத்தில் மழைபெழிவதில்

விவசாயின் இன்பங்காணும் வழியெது கதிர்முற்றி தலைசாயுதலில்

பெண்ணின் இன்பங்காணும் வழியெது அவளின் தாய்மையில்

ஆணின் இன்பங்காணும் வழியெது அவனின் முதலூதியத்தில்

காதலர்களின் இன்பங்காணும் வழியெது அவர்களின் திருமணத்தில்

தம்பதியினர் இன்பங்காணும் வழியெது அவர்கள் பெற்றோராதலில்

பறவைகளின் இன்பங்காணும் வழியெது வேடனின் குறிதவறுதலில்

இரவின் இன்பங்காணும் வழியெது பௌர்ணமியின் ஒளித்தோன்றலில்

வானில் இன்பங்காணும் வழியெது வானவில்லின் வர்ணத்தில்

அன்னையின் இன்பங்காணும் வழியெது மழலையின் புன்னகையில்

ஆசிரியரின் இன்பங்காணும் வழியெது மாணாக்கரின் வெற்றியில்

நண்பர்களின் இன்பங்காணும் வழியெது நட்பின் வெளிப்பாட்டில்


அ.ரஹீம் ஜாவித் (திருச்சி)


 நிமிர்ந்து நில்


நாள் : 19-12-2020 - அ.ரஹீம் ஜாவித் (திருச்சி) Rahim Javed (Trichy)


னிதா உண்மை உதருகில் என நிமிர்ந்து நில்

உன் அறிவு வலிமையாது நிமிர்ந்து நில்

சுயமரியதயே பெரிது நிமிர்ந்து நில்

நம் நாடு வளமிக்கது நிமிர்ந்து நில்

நாட்டின் முதுகெலும்பான விவசாயியே நிமிர்ந்து நில்

நெசவாளியே மானத்தை மறைப்பவனே நிமிர்ந்து நில்

காவலனே மக்களை பாதுகாப்பவனேன நிமிர்ந்து நில்

காதலர்களே காதல் தெய்விகமானதனே நிமிர்ந்து நில்

இல்லாலே இல்லத்தின்  அரசியேன நிமிர்ந்து நில்

தாயே உன்குலத்தின் தலைவியேன நிமிர்ந்து நில்

தந்தையே உன்குடும்ப தலைவனேன நிமிர்ந்து நில்

சிப்பாய்யே தேசத்தின் காப்பானேன நிமிர்ந்து நில்

கதிரவனே பகலொலின் அரசனேன நிமிர்ந்து நில்

வெண்மதியே இரவின் இளவரசியேன நிமிர்ந்து நில்

ஆசிரியரே மாணவனின் அறிவுந்துதலேன நிமிர்ந்து நில்

தீயே நீயே உயர்ந்தவனேன நிமிர்ந்து நில் 

-----------------------------அ.ரஹீம் ஜாவித் (திருச்சிRahim Javed (Trichy)


இயற்கைக்கு மாறாக

விதைஇல்லாமல் ரூசித்தோம் உண்ண இலகு என்று,

மனிதன் மலடாக ஏங்கி நிற்று

மகசூல் அதிகம்பேறறோம் இயற்கைக்கு மாறாக விதைத்து விரைவில் செல்வாந்தன் ஆக,கருவுற்றோம் இயற்கைக்கு மாறாக பார்பவர்கள் பழிசொல்லை தவிர்க

குறிப்பு (யார் மனதையும் காயப்படுத்த அல்ல)

-----------------------அ.ரஹீம் ஜாவித்(திருச்சி) Rahim Javed (Trichy)

கவிதை

நாள் : 17-12-2020


மனிதன் கருவறையில் தாயின் சீமந்த கவிதையாய்

பிறந்ததும் தான் உறங்க  தாலாட்டு கவிதையாய்

ஆரம்பப்பள்ளியில் அவன் பயில்கிறான் கல்வியை கவிதையாய்

அவன் உயர்கல்வியில் கற்கின்றான் இலக்கியத்தை கவிதையாய்

ஞானம் பெறுகிறான் கல்லூரியில் காவியத்தை கவிதைகளாய்

இடைப்பருவத்தில் எழுதுகிறான் காதலிக்காக காதல் கவிதையாய்

மணமான உடன் இயற்றுகிறான் காமாத்தை கவிதையாய்

பிள்ளைகளை வளர்க்க விடுகிறான் கண்ணீரை கவிதைகளாய்

பேரக்குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கிறான் எதிர்காலத்தை வாழ்த்தி கவிதைகளாய்

மரணத்தில் அவன் இறத்தகாலத்தை ஒப்பாரியில் கவிதைகளாய்

-------------------------அ.ரஹீம் ஜாவித் (திருச்சி) Rahim Javed (Trichy)

மறக்கமுடியுமா


மறக்கமுடியுமா உன்னுடன் பேசிய வார்த்தைகளை

மறக்கமுடியுமா உன்னுடன் கழித்த நொடிகளை

மறக்கமுடியுமா உன்னுடன் உண்ட நாட்களை

மறக்கமுடியுமா உன்னுடன் மகிழ்ந்த கூத்தாடியதை

மறக்கமுடியுமா உன்னுடன் சுற்றிய போழுதுகளை

மறக்கமுடியுமா உன்னுடன்  விளையாடி வீண்னடித்ததை

மறந்தாலும் அழிக்க முடியாது நம் நினைவுகளை நண்பா

-----------------------------அ.ரஹீம் ஜாவித் (திருச்சி) Rahim Javed (Trichy)

சுவர் ஓவியம்

நாள் : 14 - 12 - 2020


பெயர் : அ.ரஹீம் ஜாவித் (திருச்சி) Rahim Javed (Trichy)


வீட்டில் சுட்டி குழந்தைகளின் சுவர் கிறுக்கல்கள்  வீட்டின் சுவர் ஓவியம்

பள்ளி மாணவர்கள் பள்ளி சுவரில் பழகும் சித்திரம் பள்ளி சுவர் ஓவியம் 

பாலங்களின் சுவரில் இளைஞர்கள் பழகும் சித்திரம் சாலை ஓர சுவர் ஓவியம் 

கண்ணில் படும் சுவரில் வரையப்படும் சித்திரம் விளம்பர சுவர் ஓவியம் 

தலைவர்களுக்காக எழுதப்படும் ஓவியம் தலைவர் பிறந்தநாள் சுவர் ஓவியம் 

மதிலில் கலை மற்றும் திறமைகளை தீட்டும் சித்திரம் கலை சுவர் ஓவியம்

பல வண்ண நெகிழி அச்சு ஓவியம் ஒட்டும் சுவர் ஓவியம்

----------------------------------அ.ரஹீம் ஜாவித் (திருச்சி) Rahim Javed (Trichy)

புதிய பாரதி வேண்டும்


நாள் : 11-12-2020


பெண்குழந்தைகளின் பாலியல் வன்கொடுமைகளை தடுத்திட பாட வா

குழந்தை தொழிலாளர்கொடுமையை தடுத்திட பாட வா

சாதி மத வெறியர்களை தகர்த்தெறிய பாட வா

இளைங்கர்கள் நல்லொழுக்கம் பேணிட பாட வா

கைவிட்ட முதியோர்களின் உள்ளக்  குமறல்களை பாட வா

மக்கள் போராட்டத்தில் இருந்து விடுதலைபேற பாட வா

மனிதர்கள் ரௌத்ரதில் இருந்து விடுபட பாடா வா

தேச இன்னல்களை துடைத்தெறிய பாட வா

விவசாய்கள் வறுமையை வாரி வீச பாட வா

வறியோரின் வாழ்வாதாரம் உயர்ந்திட பாட வா

வஞ்சக செல்வந்தரின் சூழ்ச்சியை உலகம் அறிய பாட வா

நம் நாட்டின் புகழை உலகம் பரவ பாட வா என் புதிய பாரதியே

---------------------------அ.ரஹீம் ஜாவித் (திருச்சி) Rahim Javed (Trichy)


புன்னகை யை கொடு


புன்னகையை கொடு நீ வற்றினாலும் உன்னை ஈரமாக்கும்

புன்னகையை கொடு ஆத்திரத்தில் அமைதியை வழிகாட்டும்

புன்னகையை கொடு வாழ்கையில் பல அர்த்தங்கள் புரியவைக்கும்

புன்னகையை கொடு உன்னை மகிழ்ச்சி ஆட்கொள்ளும்

புன்னகையை கொடு மௌனத்தின் அர்த்தம் விளக்கும்

புன்னகையை கொடு இன்பத்தின் இனிமை அளிக்கும் 

புன்னகையை கொடு எதிரியின் குரோதம் விலகும்

புன்னகையை கொடு சோகத்தில் சுகம் கிடைக்கும் 

புன்னகையை கொடு பொன்நகையாய் இரைக்கப்படும்

புன்னகையை கொடு உன் வாட்டதை மலர செய்யும்

புன்னகையை கொடு நீ புதிதாய் மீண்டும் பிறப்பாய்

---------------------ரஹீம் ஜாவித் (திருச்சி) Rahim Javed (Trichy)


கரம் பிடித்து


வலம் வந்தோம் குழந்தையாய்  அம்மாவின் கரம் பிடித்து 

பருவத்தில் அலைந்தோம் அப்பாவின் கரம் பிடித்து

சுற்றி வந்தோம் பள்ளிப்  பிள்ளைகளாய் பெற்றோர் கரம் பிடித்து

திரிந்தோம் விடலையில் நண்பர்கள் கரம் பிடித்து

சுற்றினோம் இளமையில் காதலர்களாய் கரம் பிடித்து

அக்னியை வலம்வந்தோம் தம்பதிகளாய் கரம் பிடித்து

நடைப்பயின்றோம் வயோதிகத்தில் பேரனின் கரம் பிடித்து

உலகை சுற்றி வந்தோம் கிழ பருவத்தில் நாம் இருவரும் கரம் பிடித்து

---------------------------ரஹீம் ஜாவித் (திருச்சி) Rahim Javed (Trichy)

புதிய பாரதி வேண்டும்


நாள் : 11-12-2020


பெண்குழந்தைகளின் பாலியல் வன்கொடுமைகளை தடுத்திட பாட வா

குழந்தை தொழிலாளர்கொடுமையை தடுத்திட பாட வா

சாதி மத வெறியர்களை தகர்த்தெறிய பாட வா

இளைங்கர்கள் நல்லொழுக்கம் பேணிட பாட வா

கைவிட்ட முதியோர்களின் உள்ளக்  குமறல்களை பாட வா

மக்கள் போராட்டத்தில் இருந்து விடுதலைபேற பாட வா

மனிதர்கள் ரௌத்ரதில் இருந்து விடுபட பாடா வா

தேச இன்னல்களை துடைத்தெறிய பாட வா

விவசாய்கள் வறுமையை வாரி வீச பாட வா

வறியோரின் வாழ்வாதாரம் உயர்ந்திட பாட வா

வஞ்சக செல்வந்தரின் சூழ்ச்சியை உலகம் அறிய பாட வா

நம் நாட்டின் புகழை உலகம் பரவ பாட வா என் புதிய பாரதியே

------------------அ.ரஹீம் ஜாவித் (திருச்சி) Rahim Javed (Trichy)


எட்டயபுரத்து கவி 

நாள் : 11-12-2020


பெண்களுக்கு வீரம் ஊட்டிய எட்டயபுரத்தார்

பாப்பாவிற்கு வாழ்கை பழக்கிய எட்டயபுரத்தார்

தெய்வத்திடம் சவால் விடுத்து வேண்டிய எட்டய புரத்தார்

இளைஞர்களுக்கு அச்சமில்லா துணிவை கொடுத்த எட்டயபுரத்தார்

குஞ்சுகளில் அக்னியை கண்ட எட்டயபுரத்தார்

கண்ணமாவிடம் ஆத்திரம் சொன்ன எட்டையபுரத்தார்

நந்தலால பாட்டை பாடிய எட்டைய புரத்தார்

சுட்டும் விழியில் சுடரை தந்தவர் ளட்டையபுரத்தார்

ஆணையும் பெண்ணையும் நிகரேன கண்டாவர் எட்டையபுரத்தார்

பல சுதந்திர வேட்கையை பாடியவர் எட்டைய புரத்தார் பாரதி

-------------------அ.ரஹீம்  ஜாவித் (திருச்சி) Rahim Javed (Trichy)



Post a Comment

0 Comments